< Back
தேசிய செய்திகள்
பிரதமர் மோடி விஷத்தை உமிழ்கிறார்: முதல்-மந்திரி சித்தராமையா கண்டனம்
தேசிய செய்திகள்

பிரதமர் மோடி விஷத்தை உமிழ்கிறார்: முதல்-மந்திரி சித்தராமையா கண்டனம்

தினத்தந்தி
|
18 May 2024 12:29 AM IST

பிரதமர் மோடி விஷத்தை உமிழ்கிறார் என்று முதல்-மந்திரி சித்தராமையா தெரிவித்துள்ளார்.

பெங்களூரு,

நாடாளுமன்ற தேர்தலையொட்டி பிரதமர் மோடி உத்தரபிரதேசத்தில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். அவர் பேசுகையில், தென்இந்தியாவில் வட இந்தியர்கள் குறித்து தவறாக பேசுவதாக கூறினார். இதற்கு தென்இந்திய அரசியல் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் பிரதமர் மோடிக்கு கண்டனம் தெரிவித்துள்ள முதல்-மந்திரி சித்தராமையா தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது:-

தென்இந்திய மாநிலங்களில் நாடாளுமன்ற தேர்தல் முடிவடைந்துவிட்டது என்ற காரணத்தால், தென்இந்திய மக்களை இலக்காக கொண்டு பிரதமர் மோடி தென் இந்திய-வட இந்திய மக்கள் என்று கூறி நாட்டை பிளவுப்படுத்த முயற்சி செய்கிறார். கர்நாடகம் இந்தியாவின் மகள் என்று நாங்கள் கருதுகிறோம். இந்தியா யாரையும் பாகுபாட்டுடன் பார்த்ததே இல்லை. ஆனால் பிரதமர் மோடி போன்றவர்கள் விஷத்தை உமிழ்கிறார்கள். நாங்கள் ஒவ்வொரு மாநில மக்களுடனும் இணைந்து சக வாழ்வு வாழ்கிறோம். இதற்காக நாங்கள் பெருமை கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்