< Back
தேசிய செய்திகள்
நாக்பூர் - பிலாஸ்பூர் இடையேயான வந்தே பாரத் ரெயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்
தேசிய செய்திகள்

நாக்பூர் - பிலாஸ்பூர் இடையேயான 'வந்தே பாரத்' ரெயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

தினத்தந்தி
|
11 Dec 2022 11:20 AM IST

நாக்பூர்- பிலாஸ்பூர் இடையே ‘வந்தே பாரத்’எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

நாக்பூர்,

மகாராஷ்டிரா மாநிலத்தின் நாக்பூரில் ரூ.75 ஆயிரம் கோடி மதிப்பில் திட்டங்கள் தொடக்கம் மற்றும் பல்வேறு புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் விழா இன்று நடந்தது. விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு நாக்பூர்-பிலாஸ்பூர் இடையே வந்தே பாரத் ரெயில் சேவையை தொடங்கி வைத்தார்.

மேலும் நாக்பூர்-ஷீரடி இடையே முதல்கட்ட மெட்ரோ சேவையையும் பிரதமர் தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து நாக்பூர் மெட்ரோவின் 2-ம் கட்ட திட்ட பணிகளுக்கும் அவர் அடிக்கல் நாட்டினார். பின்னர் நாக்பூரில் அமைக்கப்பட்டுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையை நாட்டிற்கு அர்ப்பணித்தார்.

வந்தே பாரத் ரெயிலை தொடங்கி வைத்த பிரதமர் மோடி, நாக்பூர் மெட்ரோவின் ப்ரீடம் பார்க் நிலையத்தில் பிரதமர் தனது பயணச் சீட்டை வாங்கினார். பின்னர், நாக்பூர் மெட்ரோவில் ப்ரீடம் பார்க் முதல் காப்ரி வரை பயணித்து மாணவர்களுடன் கலந்துரையாடினார்.

மேலும் செய்திகள்