< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
பிரதமர் மோடி கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை - மல்லிகார்ஜுன கார்கே விமர்சனம்
|31 Dec 2023 4:33 PM IST
விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாகும் என மோடி கூறியது நடக்கவில்லை என மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்
புதுடெல்லி,
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது எக்ஸ் தளப்பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் ,
" பிரதமர் மோடி 2022-ல் விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாகும் என வாக்குறுதி அளித்திருந்தார். எல்லா இந்தியர்களுக்கும் சொந்தமான வீடு கிடைக்கும் எனக் கூறினார் . அனைவருக்கும் 24 மணிநேரமும் மின்சார விநியோகம் செய்யப்படும் எனக் கூறினார்.
இதெல்லாம் நடக்கவில்லை.பாஜக-வினர் நன்றாக பொய் சொல்வார்கள் என அனைத்து இந்தியர்களுக்கும் தெரியும்" என தெரிவித்துள்ளார்.