< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
விஜயதசமி பண்டிகை: பிரதமர் மோடி வாழ்த்து
|12 Oct 2024 11:29 AM IST
விஜயதசமி பண்டிகையையொட்டி பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
டெல்லி,
இந்து மதத்தில் துர்கை அம்மன் மகிஷாசுரனை போரிட்டு வெற்றி வாகை சூடிய நாள் விஜயதசமியாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில், நாடு முழுவதும் இன்று விஜயதசமி பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில், விஜயதசமி பண்டிகையையொட்டி நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், துர்கை அம்மன், கடவுள் ஸ்ரீராமரின் அருளால் வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியிலும் வெற்றிபெற வாழ்த்துகிறேன்' என தெரிவித்துள்ளார்.