< Back
தேசிய செய்திகள்
நேபாள விமான விபத்தில் உயிரிழந்தவர்களில் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல்
தேசிய செய்திகள்

நேபாள விமான விபத்தில் உயிரிழந்தவர்களில் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல்

தினத்தந்தி
|
15 Jan 2023 9:08 PM IST

விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

நேபாளத்தின் பொக்காரா விமான நிலையத்தில் 68 பயணிகள் மற்றும் 4 விமான ஊழியர்கள் உள்பட 72 பேருடன் வந்த எட்டி ஏர்லைன்ஸ் விமானம் தரையிறங்கும்போது திடீரென தீப்பற்றி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் 5 இந்தியர்கள் உள்பட 68 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாக பிரதமர் நரேந்திர தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறப்பட்டுள்ளதாவது;-

"நேபாளத்தில் நடந்த சோகமான விமான விபத்தில் இந்தியர்கள் உட்பட விலைமதிப்பற்ற உயிர்கள் பலியாகியுள்ளன. இந்த துக்கமான நேரத்தில், எனது எண்ணங்களும் பிரார்த்தனைகளும் துயரமடைந்த குடும்பங்களுடன் உள்ளன" என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.



மேலும் செய்திகள்