< Back
தேசிய செய்திகள்
சோனியா காந்தியின் தாயார் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்
தேசிய செய்திகள்

சோனியா காந்தியின் தாயார் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்

தினத்தந்தி
|
31 Aug 2022 7:28 PM IST

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் தாயார் பாவ்லா மைனோ மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் தாயார் பாவ்லா மைனோ, இத்தாலியில் உள்ள தனது வீட்டில் காலமானார். இத்தகவலை காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. சனிக்கிழமை அவர் காலமானதாகவும், நேற்று இறுதிச்சடங்கு நடைபெற்றதாகவும் காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

முதுமை காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த தாயாரை பார்ப்பதற்காக சோனியா காந்தி கடந்த 23ம் தேதி டெல்லியில் இருந்து புறப்பட்டுச் சென்றார். அவருடன் மகன் ராகுல் காந்தி, மகள் பிரியங்கா காந்தி ஆகியோரும் சென்றனர்.

இந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் தாயார் பாவ்லா மைனோ மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,

"சோனியா காந்தியின் தாயார் திருமதி பாவ்லா மைனோவின் மறைவுக்கு எனது இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். அவரின் ஆன்மா சாந்தியடையட்டும். சோனியா காந்தியின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்" என்று தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்