< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
குஜராத்தில் கார் மோதி 6 பக்தர்கள் உயிரிழப்பு..! பிரதமர் மோடி இரங்கல்
|2 Sept 2022 3:27 PM IST
குஜராத்தின் அம்பாஜியில் நேரிட்ட விபத்தில் பலியானவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:
குஜராத் மாநிலம் அர்வல்லி மாவட்டத்தில் உள்ள அம்பாஜி கோயில் நகரத்தை நோக்கி நடந்து கொண்டிருந்த பக்தர்கள் மீது கார் மோதியதில் 6 பேர் பரிதாமாக உயிரிழந்தனர்.
மேலும் கார் டிரைவர் உட்பர 7 பேர் படுகாயம் அடைந்தனர்.இவர்களுக்கு அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். பிரதமர் அலுவலக ட்விட்டரில் தெரிவித்துள்ளதாவது,
"குஜராத் மாநிலம் அம்பாஜியில் நேரிட்ட விபத்து காரணமாக உயிரிழப்புகள் ஏற்பட்டதை கேட்டு நான் மிகவும் வேதனையடைகிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய நான் பிரார்த்திக்கிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்பட்டு வருகிறது" என தெரிவித்துள்ளார்.