< Back
தேசிய செய்திகள்
ஜே.எம்.எம். லஞ்ச வழக்கு.. சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை பாராட்டிய பிரதமர் மோடி
தேசிய செய்திகள்

ஜே.எம்.எம். லஞ்ச வழக்கு.. சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை பாராட்டிய பிரதமர் மோடி

தினத்தந்தி
|
4 March 2024 1:07 PM IST

சுப்ரீம் கோர்ட்டு அளித்துள்ள தீர்ப்பு தூய்மையான அரசியலை உறுதி செய்யும் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

புதுடெல்லி:

சட்டமன்றம் மற்றும் பாராளுமன்றத்தில் பேசுவதற்காகவும் வாக்களிப்பதற்காகவும் லஞ்சம் வாங்குவது குற்றம் என்றும், லஞ்சம் பெறுவது தொடர்பான வழக்கு விசாரணையில் இருந்து எம்.எல்.ஏ., எம்.பி.க்களுக்கு விலக்கு கிடையாது எனவும் சுப்ரீம் கோர்ட்டு அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

ஜே.எம்.எம். லஞ்ச வழக்கில், 1998-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டின் ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு வழங்கிய தீர்ப்பை, இப்போது ஏழு நீதிபதிகள் கொண்ட அமர்வு ஒருமனதாக நிராகரித்துள்ளது.

இந்த தீர்ப்பை பிரதமர் நரேந்திர மோடி வரவேற்று பாராட்டி உள்ளார்.

"சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பை வரவேற்கிறேன். இந்த தீர்ப்பு தூய்மையான அரசியலை உறுதி செய்வதுடன், அரசியலமைப்பின் மீது மக்களிடையே ஆழ்ந்த நம்பிக்கையை ஏற்படுத்தும்" என்று பிரதமர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்