இந்தியாவில் தினசரி விமான சேவையை பயன்படுத்தும் பயணிகள் எண்ணிக்கை 4 லட்சமாக அதிகரிப்பு - பிரதமர் மோடி பாராட்டு
|இந்தியாவில் தினசரி 4 லட்சம் பயணிகள் விமான சேவையை பயன்படுத்துகிறார்கள் என்ற சாதனையை விமானப் போக்குவரத்து துறை எட்டியுள்ளது.
புதுடெல்லி,
இந்தியாவில் தினசரி 4 லட்சம் பயணிகள் விமான சேவையை பயன்படுத்துகிறார்கள் என்ற சாதனையை இந்திய சிவில் விமானப் போக்குவரத்து துறை எட்டியுள்ளது.
மேலும், கொரோனா காலத்திற்கு முன்பு இருந்ததை விட அதிக அளவிலான பயணிகள் விமான சேவையை பயன்படுத்துகிறார்கள். இந்த சாதனைகளை படைத்த இந்திய சிவில் விமானப் போக்குவரத்து துறைக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்தார்.
இந்தியா முழுவதும் விமானப் போக்குவரத்து இணைப்பை மேலும் மேம்படுத்துவதில் கவனம் செலுத்தப்படுவதாகவும், இது 'எளிதாக வாழ்வதற்கும்' பொருளாதார முன்னேற்றத்திற்கும் முக்கியமானது என்றும் அவர் கூறினார்.
சிவில் விமான போக்குவரத்து துறை மந்திரி ஜோதிர் ஆதித்ய சிந்தியாவின் டுவிட்டர் பதிவை மேற்கோள் காட்டி பிரதமர் கூறியிருப்பதாவது;
"இது சிறந்த அறிகுறி. இந்தியா முழுவதும் இணைப்பை மேலும் வலுப்படுத்துவதில் அதிக கவனம் செலுத்தப்படும். இது எளிதான வாழ்க்கை, மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்கு முக்கியமானதாகும்" என்று பாராட்டினார்.