< Back
தேசிய செய்திகள்
பிரதமர் தலைமையிலான மாநிலங்களுக்கு இடையேயான கவுன்சில் மாற்றியமைப்பு
தேசிய செய்திகள்

பிரதமர் தலைமையிலான மாநிலங்களுக்கு இடையேயான கவுன்சில் மாற்றியமைப்பு

தினத்தந்தி
|
24 May 2022 2:21 AM IST

பிரதமர் தலைமையிலான மாநிலங்களுக்கு இடையேயான கவுன்சில் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

கூட்டாட்சியை ஆதரித்து ஊக்குவிக்கும் நோக்கில் மாநிலங்களுக்கு இடையேயான கவுன்சில் செயல்பட்டு வருகிறது. பிரதமரை தலைமையாக கொண்டு செயல்படும் இந்த கவுன்சிலை மத்திய அரசு மாற்றி அமைத்து உள்ளது.

அதன்படி பிரதமரை தலைவராக கொண்ட இந்த கவுன்சிலில் அனைத்து மாநில முதல்-மந்திரிகளும், 6 மத்திய மந்திரிகளும் உறுப்பினர்களாக இடம்பெற்று உள்ளனர். 10 மத்திய மந்திரிகள் இந்த கவுன்சிலின் நிரந்தர அழைப்பாளர்களாக இருப்பார்கள்.

நாட்டில் கூட்டாட்சியை மேம்படுத்துவதற்கு ஒரு வலுவான நிறுவன கட்டமைப்பை உருவாக்குவது, வழக்கமான கூட்டங்களை ஒழுங்கமைப்பதன் மூலம் கவுன்சில் மற்றும் மண்டல கவுன்சில்களை செயல்படுத்துவது போன்றவை இந்த கவுன்சிலின் பணி ஆகும். இதைப்போல மாநிலங்களுக்கு இடையேயான கவுன்சிலின் நிலைக்குழுவும் மாற்றியமைக்கப்பட்டு இருக்கிறது.

இந்த கவுன்சிலுக்கு உள்துறை மந்திரி அமித்ஷா தலைவராக நியமிக்கப்பட்டு உள்ளார். ஆந்திரா, அசாம், பீகார், குஜராத், மராட்டியம், ஒடிசா, பஞ்சாப் மற்றும் உத்தரபிரதேச முதல்-மந்திரிகளும், மத்திய மந்திரிகள் நிர்மலா சீதாராமன், நரேந்திர சிங் தோமர், விரேந்திர குமார், கஜேந்திர செகாவத் உள்ளிட்டோரும் இந்த குழுவில் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.

மேலும் செய்திகள்