< Back
தேசிய செய்திகள்
மத்தியபிரதேசத்தில் பிளஸ்-1 மாணவி சுட்டுக்கொலை
தேசிய செய்திகள்

மத்தியபிரதேசத்தில் பிளஸ்-1 மாணவி சுட்டுக்கொலை

தினத்தந்தி
|
12 July 2023 5:01 AM IST

போலீசார் வழக்குப்பதிவு செய்து துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பி ஓடிய வர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

போபால்,

மத்தியபிரதேசத்தின் குவாலியரை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. அங்குள்ள பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். இரவு 8 மணியளவில் டியூசன் முடிந்து தோழியுடன் ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரது வாகனத்தை மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் பின்தொடர்ந்தனர். திடீரென சிறுமியின் ஸ்கூட்டரை மறித்து தாங்கள் மறைந்து வைத்திருந்த துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுவிட்டு தப்பியோடினர்.

உடலில் குண்டு பாய்ந்து ரத்தவெள்ளத்தில் கிடந்த சிறுமியை ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அதிர்ஷ்டவசமாக பெண்தோழி காயம் ஏதுமின்றி தப்பினாள்.

போலீசார் வழக்குப்பதிவு செய்து துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பி ஓடிய வர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்