< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
சுப்ரீம் கோர்ட்டில் அனைவரும் முககவசம் அணிய வேண்டும் - தலைமை நீதிபதி அறிவுறுத்தல்
|12 Aug 2022 5:28 AM IST
சுப்ரீம் கோர்ட்டில் அனைவரும் முககவசம் அணிய வேண்டும் என்று தலைமை நீதிபதி அறிவுறுத்தியுள்ளார்.
புதுடெல்லி,
கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், கோர்ட்டு அறைக்குள் வக்கீல்கள் அனைவரும் முககவசம் அணிய வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி என்.வி.ரமணா அறிவுறுத்தியுள்ளார்.
மேலும், வழக்கை அவசரமாக விசாரிக்க முறையிட வந்த வக்கீலிடம் தலைமை நீதிபதி என்.வி.ரமணா, ஊழியர்களும், சக நீதிபதிகளும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே சுப்ரீம் கோர்ட்டில் அனைவரும் முககவசம் அணிய வேண்டும் என அறிவுறுத்தினார்.