< Back
தேசிய செய்திகள்
நீங்கள்தான் ஹோலி கொண்டாடுவீர்களா? நானும் கொண்டாடுவேன்...குட்டி யானை செய்த சுட்டி
தேசிய செய்திகள்

நீங்கள்தான் ஹோலி கொண்டாடுவீர்களா? நானும் கொண்டாடுவேன்...குட்டி யானை செய்த சுட்டி

தினத்தந்தி
|
7 March 2024 10:51 AM IST

இந்திய வனத்துறை அதிகாரி சுஷந்தா நந்தா பகிர்ந்த குட்டி யானை ஒன்றின் வீடியோ வைரலாகி வருகிறது.

புதுடெல்லி,

வண்ணங்களின் திருவிழாவான ஹோலி பண்டிகை நாடு முழுவதும் விரைவில் கொண்டாடப்பட உள்ளது. இந்த பண்டிகையின் போது ஒருவர் மீது ஒருவர் பல விதமான வண்ண பொடிகளை வீசி மகிழ்ச்சியாக ஓடி, ஆடி கொண்டாடுவார்கள்.

இந்நிலையில் இந்திய வனத்துறை அதிகாரியான சுஷந்தா நந்தா பகிர்ந்த குட்டி யானை ஒன்றின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், அந்த குட்டி யானை மிகவும் மகிழ்ச்சியாக விளையாடும் காட்சிகள் உள்ளது. குறிப்பாக தரையில் இருந்து மண், தூசியை தன் மீது வாரி இறைத்து விளையாடும் காட்சிகள் பயனர்களை ரசிக்க செய்கிறது. 'அவரது பாணியில் ஹோலி கொண்டாட்டம்' என்ற தலைப்பில் சுஷந்தா நந்தா பகிர்ந்த இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் ரசனையான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்