ஐயப்பன் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்! நேற்று 84 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தரிசனம்
|ஐயப்பன் கோயிலில் கடந்த 17-ந்தேதி முதல் 27-ந்தேதி வரை 11 நாட்களில் 6 லட்சம் பேர் சாமி தரிசனம் செய்து உள்ளனர்.
திருவனந்தபுரம்
சபரிமலையில் இதுவரை 6 லட்சத்திற்கும் மேற்பட்டோர் சாமி தரிசனம் செய்துள்ளனர். இதன்மூலம் 10 நாட்களில் கோவிலுக்கு ரூ.52½ கோடி வருவாய் கிடைத்தது. அதில் அப்பம்-அரவணை விற்பனை மூலம் மட்டும் ரூ.26 கோடி கிடைத்துள்ளது.
சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல, மகரவிளக்கு சீசனையொட்டி கடந்த 16-ந்தேதி நடை திறக்கப்பட்டது. 17-ந்தேதி முதல் வழக்கமான பூஜைகள், வழிபாடுகள் நடந்து வருகிறது. பக்தர்களும் தரிசனம் செய்து வருகின்றனர்.
கடந்த 17-ந்தேதி முதல் 27-ந்தேதி வரை 11 நாட்களில் 6 லட்சம் பேர் சாமி தரிசனம் செய்து உள்ளனர்.
மேலும், சபரிமலையில் வருகிற 30-ந்தேதி வரை சாமி தரிசனத்துக்காக 8 லட்சத்து 79 ஆயிரம் பக்தர்கள் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்துள்ளனர். தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பல மணிநேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.
நேற்று ஒரே நாளில் 84 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தரிசனம் செய்தனர். மொத்தம் 89 530 பேர் முன்பதிவு செய்து இருந்தனர். கடந்த சனிக்கிழமை 78 ஆயிரம் பேர் தரிசனம் செய்தனர்.இன்று 71 அயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் முன்பதிவு செய்து உள்ளனர். இதைல் காலை 9 மணி நிலவரப்படி 29 ஆயிரம் பேர் சாமி தரிசனம் எய்து செய்து உள்ளனர்.