< Back
தேசிய செய்திகள்
ரூ.2,000 நோட்டு வாபசை எதிர்த்து பொதுநல மனு - டெல்லி ஐகோர்ட்டில் தாக்கல்

கோப்புப்படம்

தேசிய செய்திகள்

ரூ.2,000 நோட்டு வாபசை எதிர்த்து பொதுநல மனு - டெல்லி ஐகோர்ட்டில் தாக்கல்

தினத்தந்தி
|
25 May 2023 12:27 AM IST

ரூ.2,000 நோட்டு வாபசை எதிர்த்து பொதுநல மனு ஒன்று டெல்லி ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

2,000 ரூபாய் நோட்டுகள் வாபஸ் பெறப்படும் என்ற ரிசர்வ் வங்கி அறிவிப்புக்கு எதிராக டெல்லியை சேர்ந்த வக்கீல் ரஜ்னீஷ் பாஸ்கர் குப்தா என்பவர் டெல்லி ஐகோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:-

பொது மக்கள் வரிப்பணத்தை செலவழித்து 2,000 ரூபாய் நோட்டுகள் அச்சிடப்பட்டுள்ளன. போதுமான அறிவியல்பூர்வமான காரணங்களின்றி இந்த ரூபாய் நோட்டுகளை திரும்ப பெற்றால் பொதுமக்கள் வரிப்பணம் வீணாகும்.

ரிசர்வ் வங்கியின் அறிவிப்பால் 2000 ரூபாய் நோட்டுகளை யாரும் வாங்குவதில்லை. ரிசர்வ் வங்கி சட்டத்தின்படி, ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பை வெளியிட அதிகாரமில்லை.

இந்த அறிவிப்பு பொதுக்கொள்கைக்கு விரோதமானது, நியாயமற்றது, தன்னிச்சையானது. எனவே, ரிசர்வ் வங்கியின் அறிவிப்பை ரத்துசெய்ய வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகள்