< Back
தேசிய செய்திகள்
பொது சிவில் சட்டம் இயற்ற உத்தரவிட முடியாது - சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு மனு

கோப்புப்படம் 

தேசிய செய்திகள்

பொது சிவில் சட்டம் இயற்ற உத்தரவிட முடியாது - சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு மனு

தினத்தந்தி
|
19 Oct 2022 1:11 AM IST

பொது சிவில் சட்டம் இயற்ற உத்தரவிட முடியாது என்று சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு மனு தாக்கல் செய்தது.

புதுடெல்லி,

பொது சிவில் சட்டத்தை இயற்றக்கோரி பா.ஜ.க.வை சேர்ந்த அஸ்வினிகுமார் உபாத்யாய் தாக்கல் செய்த பொதுநல மனுவை சுப்ரீம் கோர்ட்டு விசாரித்து வருகிறது.

அந்த பொதுநல மனு தொடர்பாக மத்திய சட்ட அமைச்சகத்தின் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பதில்மனுவில், குறிப்பிட்ட சட்டத்தை இயற்ற நாடாளுமன்றத்துக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட முடியாது.

பொது சிவில் சட்டம் கொள்கை சார்ந்த விவகாரம். இதில் மேற்கொள்ளப்பட வேண்டியவற்றை மக்கள் பிரதிநிதிகள் முடிவு செய்வார்கள். பொது சிவில் சட்டத்தை இயற்றுவதா வேண்டாமா என நாடாளுமன்றமே முடிவு செய்யும். இந்த விவகாரம் தொடர்பாக சட்ட ஆணையம் அளிக்கும் அறிக்கையை மத்திய அரசு பரிசீலித்து, உரியவர்களிடம் ஆலோசனை நடத்தும். எனவே, பொது சிவில் சட்டத்தை இயற்றக்கோரிய பொதுநல மனு விசாரணைக்கு உகந்ததல்ல என தெரிவித்து தள்ளுபடி செய்ய வேண்டும் என கோரியுள்ளது.

மேலும் செய்திகள்