< Back
தேசிய செய்திகள்
பிபோர்ஜாய் புயல் எதிரொலி: 137 ரெயில்கள் ரத்து.!
தேசிய செய்திகள்

'பிபோர்ஜாய்' புயல் எதிரொலி: 137 ரெயில்கள் ரத்து.!

தினத்தந்தி
|
12 Jun 2023 10:41 PM IST

புயல் காரணமாக குஜராத் மேற்கு ரெயில்வே பிராந்தியத்தில் 137 ரெயில்கள் ரத்துசெய்யப்பட்டுள்ளது.

அகமதாபாத்,

தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி பிபோர்ஜாய் புயலாக உருவெடுத்துள்ளது. இது அதிதீவிர புயலாக வலுப்பெற்று ஜூன் 15ஆம் தேதி நண்பகல் குஜராத்தின் மான்ட்வி-பாகிஸ்தானின் கராச்சி இடையே சவுராஷ்டிரா, கட்ச் பகுதியில் கரையைக் கடக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புயல் காரணமாக குஜராத்தில் அரசு சார்பில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், புயல் காரணமாக 137 ரெயில் சேவைகள் ரத்துசெய்யப்பட்டு உள்ளது.

குஜராத் மேற்கு ரெயில்வே பிராந்தியத்தில் 137 ரெயில்கள் ரத்துசெய்யப்பட்டுள்ளதாக ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்