< Back
தேசிய செய்திகள்
ஆந்திராவில் மருந்து ஆலை தீ விபத்து:  உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.1 கோடி நிதியுதவி அறிவிப்பு
தேசிய செய்திகள்

ஆந்திராவில் மருந்து ஆலை தீ விபத்து: உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.1 கோடி நிதியுதவி அறிவிப்பு

தினத்தந்தி
|
22 Aug 2024 11:26 PM IST

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்திரபாபு நாயுடு நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

அனகாபள்ளி,

ஆந்திர பிரதேசத்தின் அனகாபள்ளி மாவட்டத்தில் அச்சுதாபுரம் பகுதியில் உள்ள சிறப்பு பொருளாதார மண்டலத்தில் மருந்து தொழிற்சாலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில், நேற்று 200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலையில் ஈடுபட்டு வந்தனர்.அப்போது மதிய உணவு நேரத்தின்போது மருந்து தொழிற்சாலையில் உள்ள ரியாக்டர் வெடித்து விபத்துக்குள்ளானது. இதனையடுத்து அருகில் உள்ள பொருட்கள் அனைத்தும் தீப்பிடித்து எரிந்தன. இந்த தீ விபத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது.இந்த விபத்தில் படுகாயம் அடைந்த 20-க்கும் மேற்பட்டோருக்கு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், இந்த விபத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை அம்மாநில முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

மேலும், இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 1 கோடியும், படுகாயமடைந்த குடும்பங்களுக்கு தலா ரூ. 50 லட்சமும், சிறு காயங்கள் ஏற்பட்டவர்களுக்கு ரூ. 25 லட்சம் வழங்கப்படும். என்றும் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்

மேலும் செய்திகள்