< Back
தேசிய செய்திகள்
ஆந்திராவில் மருந்து ஆலையில் தீ விபத்து:  17 பேர் பலி; உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவு
தேசிய செய்திகள்

ஆந்திராவில் மருந்து ஆலையில் தீ விபத்து: 17 பேர் பலி; உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவு

தினத்தந்தி
|
22 Aug 2024 8:18 AM IST

ஆந்திர பிரதேச முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு, மருந்து ஆலையில் நடந்த தீ விபத்தில் உயிரிழந்த மற்றும் காயமடைந்த நபர்களின் குடும்பத்தினரை இன்று சந்திப்பார்.

அனகாபள்ளி,

ஆந்திர பிரதேசத்தின் அனகாபள்ளி மாவட்டத்தில் அச்சுதாபுரம் பகுதியில் உள்ள சிறப்பு பொருளாதார மண்டலத்தில் மருந்து தொழிற்சாலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில், நேற்று 200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலையில் ஈடுபட்டு வந்தனர்.

அப்போது மதிய உணவு நேரத்தின்போது மருந்து தொழிற்சாலையில் உள்ள ரியாக்டர் வெடித்து விபத்துக்குள்ளானது. இதனையடுத்து அருகில் உள்ள பொருட்கள் அனைத்தும் தீப்பிடித்து எரிந்தன. இந்த தீ விபத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது.

இந்த விபத்தில் படுகாயம் அடைந்த 20-க்கும் மேற்பட்டோருக்கு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனை அனகாபள்ளி மாவட்ட கலெக்டர் விஜய கிருஷ்ணன் இன்று உறுதிப்படுத்தியுள்ளார்.

ஆந்திர பிரதேச முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு இதுபற்றிய உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டு உள்ளார். சம்பவத்தில் உயிரிழந்த மற்றும் காயமடைந்த நபர்களின் குடும்பத்தினரை அவர் இன்று சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகள்