< Back
தேசிய செய்திகள்
இடஒதுக்கீட்டுக்கு எதிரான மனுக்கள்: சுப்ரீம் கோர்ட்டில் செப்.13-ந் தேதி விசாரணை

கோப்புப்படம்

தேசிய செய்திகள்

இடஒதுக்கீட்டுக்கு எதிரான மனுக்கள்: சுப்ரீம் கோர்ட்டில் செப்.13-ந் தேதி விசாரணை

தினத்தந்தி
|
31 Aug 2022 12:20 AM IST

பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டுக்கு எதிரான மனுக்கள் மீது சுப்ரீம் கோர்ட்டில் செப்.13-ந் தேதி விசாரணை நடைபெறுகிறது.

புதுடெல்லி,

பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான இடஒதுக்கீடு சட்டத்தை எதிர்த்தும், முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டுள்ள சமூக, கல்வியில் பின்தங்கிய வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டை எதிர்த்தும் சுப்ரீம் கோர்ட்டில் ரிட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இந்த மனுக்கள் தலைமை நீதிபதி யு.யு.லலித் தலைமையிலான 5 நீதிபதிகள் பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வு முன் விசாரணைக்கு வந்தன. இந்த இரு விவகாரங்கள் தொடர்புடைய எழுத்துப்பூர்வமான பொதுவான வாதங்களை தாக்கல் செய்வதற்காக ஒருங்கிணைப்பு வக்கீல்களை நியமித்த சுப்ரீம் கோர்ட்டு, விசாரணையை அடுத்த கட்டத்துக்கு எப்படி கொண்டுசெல்வது என்பது குறித்து முடிவு செய்வதற்காக செப்டம்பர் 6-ந் தேதிக்கு மீண்டும் மனுக்களை பட்டியலிட உத்தரவிட்டது. மேலும் இந்த மனுக்கள் மீதான விசாரணை செப்டம்பர் 13-ந் தேதி தொடங்கும் என்றும் தெரிவித்தது.

மேலும் செய்திகள்