< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
குடியுரிமை சட்டத்திருத்தத்தை எதிர்க்கும் மனுக்கள்: சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை
|31 Oct 2022 4:42 AM IST
குடியுரிமை சட்டத்திருத்தத்தை எதிர்க்கும் மனுக்கள் மீது சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை நடைபெறுகிறது.
புதுடெல்லி,
குடியுரிமை சட்டத்திருத்தத்துக்கு எதிராக இந்திய யூனியன் முஸ்லிம் லீக், காங்கிரஸ், தி.மு.க., தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம், மக்கள் நீதி மய்யம் உள்ளிட்டோர் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் 232 ரிட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
அந்த மனுக்கள் தொடர்பாக பதில் அளிக்க மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் உத்தரவிட்டது.
இந்த நிலையில் தலைமை நீதிபதி யு.யு.லலித் தலைமையிலான அமர்வு இந்த ரிட் மனுக்களை இன்று (திங்கட்கிழமை) மீண்டும் விசாரிக்கவுள்ளது.