< Back
தேசிய செய்திகள்
ராமர் பாலத்தை தேசிய சின்னமாக அறிவிக்க கோரிய மனு - சுப்ரீம் கோர்ட்டில் 26-ந்தேதி விசாரணை
தேசிய செய்திகள்

ராமர் பாலத்தை தேசிய சின்னமாக அறிவிக்க கோரிய மனு - சுப்ரீம் கோர்ட்டில் 26-ந்தேதி விசாரணை

தினத்தந்தி
|
14 July 2022 5:31 AM IST

ராமர் பாலத்தை தேசிய சின்னமாக அறிவிக்க கோரும் சுப்பிரமணிய சாமியின் மனு சுப்ரீம் கோர்ட்டில் 26-ந்தேதி விசாரணைக்கு வருகிறது.

புதுடெல்லி,

ராமர் பாலத்தை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிக்கக் கோரும் வழக்கை விரைந்து விசாரிக்க கோரி சுப்பிரமணிய சாமி சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு முன் நேற்று ஆஜராகி முறையிட்டார்.

அந்த முறையீட்டை ஏற்ற நீதிபதிகள், ராமர் பாலத்தை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிக்கக் கோரிய வழக்குடன், ஏனைய இடைக்கால மனுக்களையும் சேர்த்து வருகிற 26-ந் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்