< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
அமெரிக்காவுக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றுமதிக்கு அனுமதி கிடைக்குமா? - சீரம் நிறுவனம் விண்ணப்பம்
|1 July 2022 5:59 AM IST
அமெரிக்காவுக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றுமதி செய்ய அனுமதி கோரி மத்திய அரசிடம் சீரம் நிறுவனம் விண்ணப்பித்துள்ளது.
புதுடெல்லி,
புனேயில் உள்ள இந்திய சீரம் நிறுவனம், கொரோனாவுக்கு எதிராக கோவோவாக்ஸ் தடுப்பூசியை தயாரித்து வருகிறது. இந்த தடுப்பூசியை 'நுவாக்ஸோவிட்' என்ற வர்த்தக பெயரில், 32.4 லட்சம் டோஸ்களை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்ய இந்திய சீரம் நிறுவனம் விரும்புகிறது.
இதற்கான அனுமதி கோரி மத்திய அரசிடம் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. இந்த அனுமதி கிடைத்து விட்டால் 3-ந் தேதி தடுப்பூசிகள் அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்டு விடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இந்திய தடுப்பூசி நிறுவனம் ஒன்றின் தடுப்பூசி அமெரிக்காவுக்கு ஏற்றுமதி ஆவது இதுவே முதல் முறை என அந்த தகவல்கள் கூறுகின்றன. இந்த தடுப்பூசியின் அவசர கால பயன்பாட்டுக்கு இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டு இயக்குனர் கடந்த ஆண்டு டிசம்பர் 28-ந் தேதி ஒப்புதல் வழங்கி இருப்பது நினைவுகூரத்தக்கது.