நடிகர் கணேஷ் கட்டிடம் கட்ட வழங்கிய அனுமதி ரத்து-மந்திரி ஈஸ்வர் கன்ட்ரே தகவல்
|பந்திப்பூர் வனப்பகுதியில் நடிகர் கணேஷ் கட்டிடம் கட்ட வழங்கிய அனுமதி ரத்து செய்யப்பட்டு இருப்பதாக மந்திரி ஈஸ்வர் கன்ட்ரே கூறினார்.
பெங்களூரு:-
இதுதொடர்பாக பெங்களூருவில் மந்திரி ஈஸ்வர் கன்ட்ரே நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-
நடிகர் கணேஷ்
நடிகர் கணேஷ் பந்திப்பூர் வனப்பகுதி அமைந்துள்ள குண்டலுபேட்டை தாலுகா ஜக்கலியா பகுதியில் கட்டிடம் கட்டி வருவதாக சர்ச்சை எழுந்துள்ளது. வனப்பகுதியில் தற்காலிக கட்டிடம் கட்டுவதற்காக வனத்துறை அனுமதி வழங்கி இருந்தது. தற்காலிகமாக கட்டிடம் கட்டுவதற்கு மட்டுமே வனத்துறை அனுமதி வழங்கி இருந்தது. ஆனால் நடிகர் கணேஷ் அங்கு நிரந்தரமான கட்டிடத்தை கட்டுவதாக புகார்களும், குறறச்சாட்டுகளும் கூறப்படுகிறது.
இதன் காரணமாக வனத்துறை பகுதியில் நடிகர் கணேஷ் கட்டிடம் கட்டுவதற்காக வனத்துறை சார்பில் வழங்கப்பட்டு இருந்த அனுமதி ரத்து செய்யப்பட்டு இருக்கிறது.
அனுமதி ரத்து
இந்த விவகாரம் தொடர்பாக நடிகர் கணேஷ் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த வழக்கு கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. எனவே இந்த விவகாரம் குறத்து அதிகம் பேச விரும்பவில்லை. வனத்துறை கொடுத்த அனுமதி முறைப்படி ரத்து செய்யப்பட்டு இருக்கிறது.
இவ்வாறு மந்திரி ஈஸ்வர் கன்ட்ரே கூறினார்.