நீட் விவகாரம்: நிரந்தர தீர்வு காண வேண்டும் - மாயாவதி
|நீட் தேர்வில் நிச்சயமற்ற தன்மையால் மக்கள் அமைதியை இழந்துள்ளதாக மாயாவதி கூறியுள்ளார்.
லக்னோ,
நீட் தேர்வில் நிலவும் நிச்சயமற்ற நிலை மக்களிடையே அமைதியின்மை, பதட்டம், கோபத்தை ஏற்படுத்துவதாக பகுஜன் சமாஜ் கட்சி (பிஎஸ்பி) தலைவர் மாயாவதி கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-
நீட் தேர்வில் நிச்சயமற்ற தன்மையால் மக்கள் அமைதியை இழந்துள்ளனர். நாட்டில் அவ்வப்போது நடைபெறும் பல்வேறு தேர்வுகளின் புனிதத்தன்மையுடன், தற்போது நிலவும் நிச்சயமற்ற தன்மை, குறிப்பாக நீட் இளங்கலை மற்றும் முதுகலை தேர்வுகளால் மக்களிடையே அமைதியின்மை, பதட்டம் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு விரைவான மற்றும் நிரந்தரத் தீர்வைக் கண்டறிவது மிகவும் முக்கியமானது.
அகில இந்திய அளவில் மட்டுமின்றி உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் நடைபெறும் தேர்வுகளில் வினாத்தாள் கசிவு மற்றும் அரசு ஆள்சேர்ப்பு விவகாரங்களிலும் ஊழல் நடந்துள்ளது வருத்தம் ஏற்படுத்துவதோடு கவலையையும் அளிக்கிறது. முறைகேடுகளை தடுக்க கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மேலும் இந்த பிரச்சினைகளில் எந்தவித அரசியல் அலட்சியமோ, ஆதாயமோ இருக்க கூடாது என பதிவிட்டுள்ளார்.