மைசூருவில் கனமழையால் மக்கள் அவதி
|மைசூருவில் கனமழை பெய்ததால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர்.
மைசூரு
நாடு முழுவதும் இன்று (திங்கட்கிழமை) விநாயகர் சதுர்த்தி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி நேற்று பொதுமக்கள் பூஜை பொருட்கள், பூக்கள் வாங்க மார்க்கெட்டுகளில் குவிந்தனர். இதேப்போல் மைசூருவிலும் பொதுமக்கள் பொருட்கள் வாங்க மார்க்கெட்டுகளில் ஏராளமானோர் சென்றனர்.
அப்போது மைசூரு டவுன் பகுதியில் திடீரென கனமழை பெய்தது. இதனால் மார்க்கெட்டுகளுக்கு சென்ற பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர். கனமழையால் சாலையோர அமைக்கப்பட்டு இருந்த பழக்கடை, பூக்கடை, விநாயகர் சிலைகள் விற்பனை செய்தவர்கள் ஆகியோர் அவதி அடைந்தார்கள்.
அவர்கள் எங்கே செல்வது என மழையில் நனைந்து கொண்டே நின்றார்கள். மேலும் தெருக்களில் பந்தல் அமைத்து விநாயகர் சிலை வைத்து பூஜை செய்ய தயார் நிலையில் இருந்தவர்கள் கனமழையால் சிலையை வைக்க முடியாமல் அவதி பட்டனர். இன்னும் 2 நாட்களுக்கு மைசூருவில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.