< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
விபத்திற்குள்ளான லாரியில் இருந்து சமையல் எண்ணெய்யை போட்டி போட்டு எடுத்துச் சென்ற மக்கள்
|23 Jan 2023 12:53 AM IST
அங்குள்ள உள்ளூர்வாசிகள் சிலர் பாத்திரங்களை கொண்டு வந்து சமையல் எண்ணெய்யை பிடித்துச் சென்றனர்.
மும்பை,
மராட்டிய மாநிலம் யவத்மல் மாவட்டத்தில் சமையல் எண்ணெய் ஏற்றிச் சென்ற லாரி ஒன்று திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரமாக கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இந்த சம்பவத்தில் லாரியின் டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
இதனிடையே லாரியில் நிரப்பப்பட்டிருந்த சமையல் எண்ணெய் சாலையில் கொட்டத் தொடங்கிய நிலையில், அதனை அங்குள்ள உள்ளூர்வாசிகள் சிலர் பாத்திரங்களை கொண்டு வந்து போட்டி போட்டு பிடித்துச் சென்றனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.