< Back
தேசிய செய்திகள்
குஜராத் மக்களால் ஜனநாயக திருவிழா விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது: பிரதமர் மோடி பேட்டி
தேசிய செய்திகள்

குஜராத் மக்களால் ஜனநாயக திருவிழா விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது: பிரதமர் மோடி பேட்டி

தினத்தந்தி
|
5 Dec 2022 12:13 PM IST

ஜனநாயக கடமையாற்றும் ஒவ்வொரு குடிமகனுக்கும் நான் நன்றியை தெரிவித்துக்கொள்வதாக, வாக்களித்த பின் பிரதமர் மோடி தெரிவித்தார்.

அகமதாபாத்,

குஜராத் சட்டமன்றதேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் வாக்களித்த பிரதமர் மோடி, பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது,

நான் தேர்தல் கமிஷனுக்கு என் இதயப்பூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த முழு உலகத்தில் பாரத திருநாட்டின் ஜனநாயகத்தை பாதுகாக்கின்ற உன்னதமான பணியில் அவர்கள் ஈடுபட்டிருக்கிறார்கள்.

அதற்காக இங்கே தேர்தலில் பணியாற்றுகின்ற அனைவருக்கும் நான் நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

குஜராத் மக்களால் ஜனநாயக திருவிழா விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. நாட்டின் பெருமை, சிறப்பு ஆகியவற்றையெல்லாம் அதிகப்படுத்தும் வண்ணம் இந்த தேர்தலில் பெருமளவில் பங்கெடுத்துக்கொண்டு வாக்களித்து வருகிறார்கள். ஜனநாயக கடமையாற்றும் ஒவ்வொரு குடிமகனுக்கும் நான் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்