< Back
தேசிய செய்திகள்
மேற்கு வங்காளம்: திடீரென கண் மூடிய கடவுள் மன்சா தேவியால் மக்கள் பரபரப்பு
தேசிய செய்திகள்

மேற்கு வங்காளம்: திடீரென கண் மூடிய கடவுள் மன்சா தேவியால் மக்கள் பரபரப்பு

தினத்தந்தி
|
16 May 2023 10:21 PM IST

மேற்கு வங்காளத்தில் கோவிலில் கடவுள் மன்சா தேவியின் சிலை திடீரென கண் மூடி காணப்பட்டது பக்தர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்படுத்தியது.

பிர்பும்,

மேற்கு வங்காளத்தின் பிர்பும் மாவட்டத்தில் துப்ராஜ்பூர் நகரில் தங்கல்தலா பகுதியில் மன்சா தேவி கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு அதிகாலை முதல் பக்தர்கள் தினமும் வந்து வழிபட்டு செல்வது வழக்கம்.

இந்த நிலையில், வழக்கம்போல் பக்தர்கள் வருகை தந்தபோது, காலையில் தேவியை பார்த்த பக்தர் ஒருவர் ஊருக்குள் சென்று, தேவியின் கண்கள் மூடிய நிலையில் காணப்படுகின்றன. அதனை நான் பார்த்தேன் என கூறியுள்ளார்.

இது காட்டுத்தீ போன்று பரவியது. இதனால், வெகு தொலைவில் இருந்தும் மக்கள் தேவியை பார்க்க கூடி விட்டனர். இதில் குறிப்பிடும்படியாக, உங்கள் கண்களால் இந்த அபூர்வ காட்சியை ஒரு முறை மட்டுமே பார்க்க முடியும் என்றும் கூறப்பட்டு உள்ளது.

இதனால், அனைவரும் கோவிலுக்கு குவிந்து விட்டனர். அப்போது, தேவியின் வாயிலும், கண்களிலும் நீர் தெளித்ததும் தேவியின் கண்கள் திறந்து கொண்டன.

ஆனால், அதற்கு முந்தின நாள் இரவு வரை கண்கள் திறந்து காணப்பட்டன என சிலர் கூறுகின்றனர். எனினும், உண்மையில் என்ன நடந்தது என ஒருவரும் கூற முன்வரவில்லை.

சிலர், அந்த வண்ணம் சேர்ந்து சிலையின் கண்கள் மூடியுள்ளன. நீர் தெளித்ததும், வண்ணம் மறைந்து, உண்மையான பழைய நிலைக்கு திரும்பி விட்டது என தெரிவித்து உள்ளனர். இதில் காரணம் என்னவென்றாலும், அந்த பகுதி மக்களிடையே சிறிது நேரம் பரபரப்பு ஏற்படுத்தி விட்டது.

மேலும் செய்திகள்