< Back
தேசிய செய்திகள்
அரிசி உள்ளிட்ட உணவுப்பொருட்களுக்கு ஜி.எஸ்.டி - மத்திய அரசுக்கு பாஜக எம்.பி. கண்டனம்

கோப்புப்படம்

தேசிய செய்திகள்

அரிசி உள்ளிட்ட உணவுப்பொருட்களுக்கு ஜி.எஸ்.டி - மத்திய அரசுக்கு பாஜக எம்.பி. கண்டனம்

தினத்தந்தி
|
19 July 2022 9:32 AM IST

அரிசி உள்ளிட்ட உணவுப்பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி. வரிவிதிப்புக்கு பாஜக எம்.பி. வருண்காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

பாக்கெட்டில் அடைக்கப்பட்ட உணவு பொருட்கள் மீதான 5 சதவீத ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு நேற்று அமலுக்கு வந்தது.

இதற்கு பா.ஜனதா எம்.பி. வருண்காந்தி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நேற்று அவர் தனது 'டுவிட்டர்' பக்கத்தில், "பால், தயிர், வெண்ணெய், அரிசி, பருப்பு, ரொட்டி போன்ற பேக்கேஜ் செய்யப்பட்ட பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி அமலுக்கு வந்துள்ளது.

வேலையில்லா திண்டாட்டம் சாதனை படைக்கும் அளவுக்கு உயர்ந்துள்ள நிலையில், இந்த ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு, நடுத்தர குடும்பங்கள் மற்றும் வாடகை வீடுகளில் வசிக்கும் இளைஞர்கள் மீது இன்னும் அதிக நிதிச்சுமையை ஏற்படுத்தி விடும்.

அவர்களுக்கு நிவாரணம் அளிக்கவேண்டிய நேரத்தில் நாம் அவர்களை துன்புறுத்திக் கொண்டிருக்கிறோம்" என்று அதில் வருண்காந்தி பதிவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்