< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
தேர்தலில் தோற்ற வேட்பாளருக்கு ரூ.2 கோடி பணம், கார் பரிசு வழங்கிய மக்கள்..!
|20 Nov 2022 8:27 PM IST
அரியானாவில் தேர்தலில் தோற்ற வேட்பாளருக்கு, கிராம மக்கள் பரிசுகள் வழங்கிய விநோத சம்பவம் நிகழ்ந்துள்ளது.
சண்டிகார்,
அரியானாவில் தேர்தலில் தோற்ற வேட்பாளருக்கு, கிராம மக்கள் பரிசுகள் வழங்கிய விநோத சம்பவம் நிகழ்ந்துள்ளது.
அரியானா மாநிலம் சிரி கிராம பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட்ட, தரம்பால் என்பவர் 66 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். இந்த நிலையில் தோல்வியடைந்த தரம்பாலுக்கு, கிராம மக்கள் 2 கோடியே 11 லட்ச ரூபாய் பணம் மற்றும் ஸ்கார்பியோ காரை பரிசாக வழங்கி மகிழ்வித்தனர்.
இதுகுறித்து பேசிய கிராம மக்கள், தரம்பால் தோல்வி அடைந்தாலும் கிராம வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தார் எனவும், தோல்வியால் அவர் மனம் தளரக்கூடாது என்பதற்காகவே பரிசுகள் வழங்கியதாகவும் தெரிவித்தனர்.