மேற்கு வங்காளத்தில் மக்கள் ஒற்றுமையாக இருக்கின்றனர் - மம்தா பானர்ஜி
|மதம், ஜாதி, மொழி வேறுபாடுகள் இருந்தபோதிலும் மேற்கு வங்காளத்தில் மக்கள் ஒற்றுமையாக இருக்கின்றனர் என்று முதல்-மந்திரி மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
கொல்கத்தா,
கொல்கத்தாவில் இன்று நடைபெற்ற ஜி 20 கூட்டமைப்பின் நிதிசார் கூட்டத்தில் மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கலந்து கொண்டார். மூன்று நாட்கள் நடைபெறவுள்ள இந்த கூட்டத்தில் உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.
கூட்டத்தில் முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கூறியதாவது:-
மேற்கு வங்காள மாநில அரசு 12 மில்லியன் வேலைகளை உருவாக்கியுள்ளது. வங்காளத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி பன்மடங்கு அதிகரித்துள்ளது. வளர்ச்சிக்கான முகமாக மேற்கு வங்காள அரசு திகழ்கிறது
மாநிலத்தில் மதம், ஜாதி, மொழி வேறுபாடுகள் இருந்தபோதிலும் மக்கள் ஒற்றுமையாக இருக்கின்றனர். எங்கள் வளர்ச்சி முயற்சிகளின் பலன்களை மக்கள் பெறுவதை உறுதி செய்வதற்காக 'உங்கள் வீட்டு வாசலில் அரசாங்கம்' (துவாரே சர்க்கார்) திட்டத்தை நாங்கள் தொடங்கினோம். இத்திட்டம் தேசிய விருதை வென்றது.
இவ்வாறு அவர் கூறினார்.