< Back
தேசிய செய்திகள்
18-59 வயதுக்குட்பட்டோருக்கு இலவச பூஸ்டர் டோஸ் செலுத்தும் பணிகள் இன்று முதல் தொடக்கம்..!

கோப்புப்படம்

தேசிய செய்திகள்

18-59 வயதுக்குட்பட்டோருக்கு இலவச பூஸ்டர் டோஸ் செலுத்தும் பணிகள் இன்று முதல் தொடக்கம்..!

தினத்தந்தி
|
15 July 2022 1:40 AM GMT

18 முதல் 59 வயதுக்குட்பட்டவர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசிகள் இன்று முதல் இலவசமாக வழங்கப்பட உள்ளன.

புதுடெல்லி,

18 முதல் 59 வயது வரை உள்ளவர்களுக்கான பூஸ்டர் டோஸ் தடுப்பூசிகள் அரசு மருத்துவமனைகளில் இன்று முதல் இலவசமாக வழங்கப்பட உள்ளன. கொரோனா பூஸ்டர் டோஸ் தடுப்பூசி என்பது இரண்டு டோஸ் எடுத்துக்கொண்ட பின்னர், நோய் எதிர்ப்பு சக்தியை உடலில் தக்கவைத்துக் கொள்ள செலுத்தப்படுகிறது.

இரண்டாவது தவணை செலுத்திய பின்னர் 6 மாத காலத்தில் பூஸ்டர் டோஸ் செலுத்திக் கொள்ளலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. 60 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் முன்களப்பணியாளர்களுக்கு மட்டுமே பூஸ்டர் டோஸ் இலவசமாக வழங்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் 60 வயதுக்குட்பட்டவர்களுக்கும் பூஸ்டர் டோஸ் இலவசமாக வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. அதன்படி இன்று முதல் 75 நாட்களுக்கு அரசு மருத்துவமனைகளில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி இலவசமாக செலுத்தப்படுகிறது. எனவே பொதுமக்கள் இதனை பயன்படுத்திக் கொள்ளுமாறு மத்திய, மாநில அரசுகள் கேட்டுக்கொண்டுள்ளன.

மேலும் செய்திகள்