< Back
தேசிய செய்திகள்
இது புனித கங்கையா அல்லது கோவா கடற்கரையா..?  சமூக வலைத்தளத்தில் வைரலாகும் வீடியோ
தேசிய செய்திகள்

இது புனித கங்கையா அல்லது கோவா கடற்கரையா..? சமூக வலைத்தளத்தில் வைரலாகும் வீடியோ

தினத்தந்தி
|
29 April 2024 12:23 PM IST

புனித கங்கையை கோவா கடற்கரையாக மாற்றிய புஷ்கர் தாமிக்கு நன்றி என வீடியோவை பகிர்ந்த நபர் குறிப்பிட்டுள்ளார்.

டேராடூன்:

உத்தரகாண்ட் மாநிலத்தின் டேராடூன் அருகில் உள்ளது ரிஷிகேஷ். இந்துக்களின் புனித நகரமாக கருதப்படும் இங்கு ஓடும் கங்கை நதியில் நீராட இந்தியா முழுவதும் இருந்து சாதுக்கள், முனிவர்கள், பக்தர்கள் பலர் வருகின்றனர்.

இந்த நிலையில், ரிஷிகேஷில் உள்ள கங்கை நதியில் பிகினி உடையில் வெளிநாட்டினர் நீராடுவது போன்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஹிமாலயன் இந்து என்ற பெயரிலான எக்ஸ் பக்கத்தில் இந்த வீடியோ பகிரப்பட்டுள்ளது.

அதில், "புனித கங்கையை கோவா கடற்கரையாக மாற்றிய புஷ்கர் தாமிக்கு (முதல்-மந்திரி) நன்றி. இப்படிப்பட்ட நிகழ்வுகள் இப்போது ரிஷிகேஷில் நடக்கின்றன. விரைவில் இந்த நகரம் மினி பாங்காக் ஆகிவிடும்" என குறிப்பிடப்பட்டுள்ளது.

மற்றொரு வீடியோ பதிவில், "ரிஷிகேஷ் நகரம் இப்போது மதம், ஆன்மிகம் மற்றும் யோகாவின் நகரமாக இல்லை. கோவா போன்று ஆகிவிட்டது. ரிஷிகேஷில் ஏன் இதுபோன்ற போதை விருந்து நிகழ்ச்சிகள் மற்றும் ஜாம்பி கலாச்சாரம் ஊக்குவிக்கப்படுகிறது? புனிதபூமி என்பது இதுதானா? இந்த புனித நகரத்தை அவர்கள் அழிக்கும் முன் ஏதாவது செய்ய வேண்டும்" என முதல்-மந்திரி புஷ்கர்சிங் தாமியை டேக் செய்துள்ளனர்.

இந்த வீடியோக்களை பார்த்த பயனர்கள், ஆதரவாகவும், எதிராகவும் கருத்துக்களை பதிவிட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்