< Back
தேசிய செய்திகள்
பெங்களூருவில் நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்; அதிகாரிகளுக்கு தலைமை கமிஷனர் உத்தரவு
தேசிய செய்திகள்

பெங்களூருவில் நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்; அதிகாரிகளுக்கு தலைமை கமிஷனர் உத்தரவு

தினத்தந்தி
|
18 Aug 2022 10:13 PM IST

பெங்களூருவில் நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று அதிகாரிகளுக்கு தலைமை கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.

பெங்களூரு:

பெங்களூரு மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட சாலைகளின் இருபுறங்கிலும் பாதசாரிகளுக்காக நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள நடைபாதைகளில் சிறு கடைகள் மற்றும் கட்டிட கட்டுமான பொருட்கள் போட்டு ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. இந்த நடைபாதைகள் ஆக்கிரமிப்பால் பாதசாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் பெங்களூருவில் நடைபாதைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்று அதிகாரிகளுக்கு தலைமை கமிஷனர் துஷார் கிரிநாத் உத்தரவிட்டுள்ளார். அந்தந்த மண்டல என்ஜினீயர்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

ஆக்கிரமிப்புகளை அகற்றிய பிறகு அதை புகைப்படம் எடுத்து அனுப்பி வைக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தி இருக்கிறார். இந்த ஆக்கிரமிப்புகளை வருகிற 21-ந் தேதிக்குள் அகற்ற வேண்டும் என்றும், அவ்வாறு அகற்றாவிட்டால் சம்பந்தப்பட்ட என்ஜினீயர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தலைமை கமிஷனர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் செய்திகள்