< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
பனை தோட்ட திட்டத்தை செயல்படுத்த பதஞ்சலி நிறுவனம் முடிவு - 12 மாநில அரசுகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்
|16 Jun 2023 10:31 PM IST
பனை எண்ணெய் தோட்ட வர்த்தகம் மூலம் 4 லட்சம் விவசாயிகள் பயன்பெற இலக்கு நிர்ணயித்துள்ளதாக பதஞ்சலி நிறுவனம் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,
சமையல் எண்ணெய் உற்பத்தியில் தன்னிறைவு பெறும் வகையில் பனை தோட்ட திட்டத்தை முழு அளவில் செயல்படுத்த பதஞ்சலி நிறுவனம் முடிவு செய்துள்ளது. 64 ஆயிரம் ஹெக்டேரில் பனை எண்ணெய் தோட்ட வர்த்தகத்தை சிறப்பாக செயல்படுத்தி வருவதாகவும், இதன் மூலம் நாடு தழுவிய அளவில் 4 லட்சம் விவசாயிகள் பயன்பெறவும் இலக்கு நிர்ணயித்துள்ளதாகவும் பதஞ்சலி நிறுவனம் தெரிவித்துள்ளது.
12 மாநில அரசுகளுடன் இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த வர்த்தகத்தில் அடுத்த 5 ஆண்டுகளில் செய்யப்படும் முதலீடுகள் மூலம் அடுத்த 7 முதல் 25 ஆண்டுகளில் பெருமளவு லாபம் கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது போன்ற நடவடிக்கைகளால் நாட்டில் சமையல் எண்ணெய் உற்பத்தியில் குறிப்பிட்ட பங்களிப்பை வழங்க முடியும் என்றும் பதஞ்சலி நிறுவனம் தெரிவித்துள்ளது.