< Back
தேசிய செய்திகள்
பயணியை காப்பாற்ற ரெயிலை தள்ளிய பயணிகள்..
தேசிய செய்திகள்

பயணியை காப்பாற்ற ரெயிலை தள்ளிய பயணிகள்..

தினத்தந்தி
|
9 Feb 2024 4:46 AM IST

ரெயிலில் சிக்கிய பயணியை காப்பாற்றுவதற்காக சக பயணிகள் இணைந்து ரெயிலை ஒரு பக்கமாக தள்ளியுள்ளனர்.

மும்பை,

மும்பையை அடுத்த நவிமும்பை வாஷி ரெயில் நிலையத்தில் நேற்று முன்தினம் மதியம் பிளாட்பாரத்தின் விளிம்பில் பயணி ஒருவர் நின்று கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக சி.எஸ்.எம்.டி.யில் இருந்து பன்வெல் நோக்கி வந்த மின்சார ரெயில் அந்த பயணி மீது மோதியது. ரெயிலில் சிக்கி சிறிது தூரம் இழுத்து செல்லப்பட்ட அவர் பிளாட்பாரத்துக்கும், தண்டவாளத்துக்கும் இடையே சிக்கி கொண்டார். உடனே ரெயிலும் நிறுத்தப்பட்டது.

இந்தநிலையில் அந்த பயணியை காப்பாற்ற மற்ற பயணிகள் முயன்றனர். இதற்காக அவர்கள் ரெயிலை ஒரு பக்கமாக தள்ளி உள்ளனர். எனினும் அவர்களால் ரெயிலை தள்ள முடியவில்லை. ரெயில்வே ஊழியர்கள் விபத்தில் சிக்கிய பயணியை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். எனினும் அவர் உயிரிழந்துவிட்டார்.

இதற்கிடையே பயணியை காப்பாற்ற பயணிகள் ரெயிலை சேர்ந்து தள்ளும் காட்சிகள் தற்போது சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

மேலும் செய்திகள்