< Back
தேசிய செய்திகள்
கேரளாவில் பயணிகள் ரெயில் என்ஜின் தடம் புரண்டு விபத்து
தேசிய செய்திகள்

கேரளாவில் பயணிகள் ரெயில் என்ஜின் தடம் புரண்டு விபத்து

தினத்தந்தி
|
16 Nov 2023 1:42 PM IST

தண்டவாளத்தில் நின்றிருந்த மாட்டின் மீது மோதியதில் ரெயில் என்ஜின் தடம் புரண்டது.

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் நிலம்பூரில் இருந்து பாலக்காடு நோக்கி சென்ற பயணிகள் ரெயில், பாலக்காடு வல்லபுழா ரெயில் நிலையம் அருகே வந்தபோது, தண்டவாளத்தில் நின்றிருந்த மாட்டின் மீது மோதியது.

இதில் என்ஜினின் முன்பக்கத்தில் உள்ள சக்கரம் தடம் புரண்டு விபத்திற்குள்ளானது. உடனடியாக என்ஜின் டிரைவர் ரெயிலை நிறுத்தினார். இந்த சம்பவத்தில் பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இந்த விபத்து காரணமாக அந்த மார்க்கத்தில் ரெயில் போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்