கேரளாவில் பயணிகள் ரெயில் தடம் புரண்டு விபத்து
|தண்டவாளத்தில் இருந்த கால்நடைகள் மீது மோதியதால் ரெயில் தடம் புரண்டதாக கூறப்படுகிறது.
திருவனந்தபுரம்,
கேரள மாநிலம் பாலக்காடு அருகே பயணிகள் ரெயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.ரெயில் தடம் புரண்ட பாதையில் சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
நிலாம்பூர் சாலை ஷோரனூர் விரைவு ரெயில் பாலக்காடு மாவட்டம் வல்லப்புழா பகுதியில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. தண்டவாளத்தில் இருந்த கால்நடைகள் மீது மோதியதால் ரெயில் தடம் புரண்டதாகக் கூறப்படுகிறது.
பாலக்காடு ரெயில்வே போலீசார் அளித்த தகவலின்படி, ரெயில் தடம் புரண்டதில் உயிரிழப்பு ஏதுமில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.காயமடைந்த பயணிகள் குறித்து தகவல் ஏதும் வெளியிடவில்லை.
விரைவு ரெயில் தடம் புரண்டதால் அந்த வழித்தடத்தில் வரக்கூடிய ஒரு ரெயிலின் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. 3 ரெயில்களின் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. ரெயில் தடம் புரண்ட இடத்தில் சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.