< Back
தேசிய செய்திகள்

தேசிய செய்திகள்
நடுவானில் விமானத்தில் புகைப்பிடித்த பயணி - அதிர்ச்சி சம்பவம்

28 Jun 2024 1:01 PM IST
நடுவானில் விமானத்தில் புகைப்பிடித்த பயணி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மும்பை,
தலைநகர் டெல்லியில் இருந்து மும்பைக்கு நேற்று மாலை இண்டிகோ விமானம் சென்றது. அந்த விமானத்தில் 176 பயணிகள் பயணித்தனர்.
நடுவானில் பயணித்துக்கொண்டிருந்தபோது விமானத்தின் கழிவறையில் இருந்து புகை வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த விமான ஊழியர்கள், கழிவறையில் இருந்து வெளியே வந்த கலீல் கான் (வயது 38) என்ற பயணியிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் விமான கழிவறையில் வைத்து புகைப்பிடித்தது தெரியவந்தது.
இதையடுத்து, விமானம் மும்பை வந்தடைந்ததும் விமான கழிவறையில் அத்துமீறி புகைப்பிடித்த பயணி கலீல் கான் குறித்து அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து பயணி கலீல் மீது அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.