< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையின்போது உயிர்நீத்த இந்தியர்களுக்கு பிரதமர் மோடி மரியாதை
|15 Aug 2023 1:00 AM IST
இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையின்போது உயிர்நீத்த இந்தியர்களுக்கு பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார்.
புதுடெல்லி,
ஆண்டுதோறும் ஆகஸ்டு 14-ந் தேதி, இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை துயர நினைவு தினமாக அனுசரிக்கப்படுகிறது.
நேற்று இந்த நாள் அனுசரிக்கப்பட்ட நிலையில், பிரதமர் மோடி தனது 'டுவிட்டர்' பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டார். அதில், பிரிவினையின்போது உயிரிழந்த இந்தியர்களுக்கு மரியாதை செலுத்தினார்.
அவர் கூறியிருப்பதாவது:-
இந்த நாள், பிரிவினையின்போது உயிர்நீத்த இந்தியர்களை நினைவுகூரும் தருணம். இந்தியாவுக்கு குடிபெயரும் நிலைக்கு தள்ளப்பட்டவர்களின் போராட்டம் மற்றும் இன்னல்களை இந்நாளில் நினைவுபடுத்திக் கொள்வோம் என்று அவர் கூறியுள்ளார்.