< Back
தேசிய செய்திகள்
நாடாளுமன்ற தேர்தல்:  6-ம்  கட்ட வாக்குப்பதிவுக்கான பிரசாரம் நிறைவு
தேசிய செய்திகள்

நாடாளுமன்ற தேர்தல்: 6-ம் கட்ட வாக்குப்பதிவுக்கான பிரசாரம் நிறைவு

தினத்தந்தி
|
23 May 2024 6:29 PM IST

நாடாளுமன்ற தேர்தலில் இதுவரை 5 கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. 6-ம் கட்ட வாக்குப்பதிவு நாளை மறுதினம் நடைபெறுகிறது.

புதுடெல்லி,

6-ம் கட்டத்தில் உத்தரப் பிரதேசத்தில் 14 மக்களவைத் தொகுதிகளுக்கும், ஹரியானாவில் 10 தொகுதிகளுக்கும், பீகாரில் 8 தொகுதிகளுக்கும், டெல்லியில் 7 தொகுதிகளுக்கும், மேற்கு வங்கத்தில் 8 தொகுதிகளுக்கும், ஒடிஷாவில் 6 தொகுதிகளுக்கும், ஜார்க்கண்டில் 4 தொகுதிகளுக்கும், ஜம்மு காஷ்மீரில் ஒரு தொகுதிக்கும் வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. 6-ம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை மறுநாள் நடைபெற உள்ளது.

மொத்தம் 7 மாநிலங்களில் உள்ள 57 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் ஓய்ந்தது. தேர்தல் நடத்தை விதிகளின் படி தொகுதிக்கு தொடர்பு இல்லாத நபர்கள் தங்கியிருக்க அனுமதி இல்லை. வாக்குப்பதிவுக்கான முழு ஏற்பாடுகளும் தீவிரமாக செய்யப்பட்டு வருகின்றன. பதற்றமான வாக்குச்சாவடிகளில் தீவிர பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்