< Back
தேசிய செய்திகள்
புதிய கட்டிடத்தில் இன்று நாடாளுமன்ற கூட்டம்..!
தேசிய செய்திகள்

புதிய கட்டிடத்தில் இன்று நாடாளுமன்ற கூட்டம்..!

தினத்தந்தி
|
19 Sept 2023 10:26 AM IST

புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் சிறப்பு கூட்டத்தொடரின் அமர்வுகள் இன்று முதல் நடைபெற உள்ளன.

புதுடெல்லி,.

நேற்று பழைய நாடாளுமன்ற கட்டிடத்தில் தொடங்கிய சிறப்பு கூட்டத்தொடரில் இந்தியாவின் கடந்த 75 ஆண்டு ஜனநாயக வரலாறு குறித்து விவாதிக்கப்பட்டது. இன்று முதல் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் இருந்து மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் செயல்பட இருக்கிறார்கள்

புதிய கட்டிடத்தில் இன்று முதல் நடைபெற இருக்கும் கூட்டத்தில், என்ன நடக்கப்போகிறது என்பதை உறுப்பினர்கள் மட்டுமல்ல, ஒட்டுமொத்த நாடே எதிர்பார்த்துக் காத்திருக்கிறது. சிறப்பு கூட்டத்தொடரில் வரலாற்றுச் சிறப்பு மிக்க முடிவுகள் எடுக்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்திருப்பது எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

இந்தநிலையில், மக்களவை அலுவல்கள் இன்று பிற்பகல் 1.15 மணிக்கும் மாநிலங்களவை அலுவல்கள் இன்று பிற்பகல் 2.15 மணிக்கும் புதிய நாடாளுமன்ற வளாகத்தில் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்களவை, மாநிலங்களவை காவலர்கள் புதிய சீருடையில் வந்துள்ளனர்.

நாளைய தினம் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட்டு விவாதம் செய்யப்பட உள்ளது. நாளை முதல் அரசின் மசோதாக்கள் மீதான விவாதமும் பரிசீலனையும் நடைபெற உள்ளன.

மேலும் செய்திகள்