எதிர்க்கட்சிகள் அமளி; இரு அவைகளும் நாள் முழுவதற்கும் ஒத்தி வைப்பு
|எதிர்க்கட்சிகளின் அமளியை தொடர்ந்து, நாடாளுமன்ற இரு அவைகளும் இன்று நாள் முழுவதற்கும் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளன. இதன்படி, நாளை காலை 11 மணி வரை இரு அவைகளின் நடவடிக்கைகளும் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளன.
Live Updates
- 20 July 2023 2:31 PM IST
எதிர்க்கட்சிகள் தொடர் அமளி; இரு அவைகளும் நாள் முழுவதற்கும் ஒத்தி வைப்பு
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியதும், எதிர்க்கட்சிகள் மணிப்பூர் விவகாரம் உள்ளிட்டவற்றை எழுப்பி தொடர்ந்து அமளியில் ஈடுபட்டன. அவையின் மைய பகுதியில் வந்து கோஷமும் எழுப்பின.
இதனால் மதியம் 2 மணி வரை இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டன. இதன் பின்னர் மீண்டும் இரு அவைகளும் கூடியதும், மணிப்பூரில் பெண்களுக்கு நேரிட்ட கொடுமையை பற்றி விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் மீண்டும் அமளியில் ஈடுபட்டன.
இதனால், இரு அவைகளின் நடவடிக்கைகளும் நாளை காலை 11 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டு உள்ளன.
- 20 July 2023 12:59 PM IST
மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிக்க அரசு சம்மதம் தெரிவித்துள்ளது: மாநிலங்களவை தலைவர்
புதுடெல்லி,
மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதம் நடத்த அரசு ஒப்புதல் தெரிவித்து இருப்பதாக மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கர் தெரிவித்துள்ளார்.
- 20 July 2023 12:24 PM IST
எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கடும் அமளியால் மாநிலங்களவை பிற்பகல் இரண்டு மணி வரை ஒத்திவைப்பு
- 20 July 2023 12:10 PM IST
மணிப்பூரில் பெண்களுக்கு நேரிட்ட கொடுமையை பற்றி விவாதிக்க வலியுறுத்தி மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் கடும் அமளி
- 20 July 2023 11:14 AM IST
நாடாளுமன்ற மக்களவை பிற்பகல் 2 மணி வரையும் மாநிலங்களவை நண்பகல் 12 மணி வரையும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
- 20 July 2023 11:04 AM IST
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது. மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிக்க எதிர்க்கட்சிகள் கோரிக்கை
- 20 July 2023 10:33 AM IST
நாடாளுமன்ற கூட்டத்தொடரை சுமூகமாக நடத்த எதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும்: பிரதமர் மோடி
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை சுமூகமாக நடத்த எதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும் என்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். ஆக்கப்பூர்வமான விவாதத்திற்கு தயார் எனவும் பிரதமர் மோடிதெரிவித்துள்ளார்.
- 20 July 2023 10:32 AM IST
மழைக்கால கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன் எதிர்க்கட்சிகள் ஆலோசனை
மழைக்கால கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்னர் எதிர்க்கட்சிகள் ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனை கூட்டத்தில்காங்கிரஸ், தி.மு.க., ஆம் ஆத்மி, சிபிஐ, ம.தி.மு.க., திரிணமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார் அணி), சிவசேனா (உத்தவ் அணி) , சமாஜ்வாதி கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
- 20 July 2023 10:27 AM IST
மணிப்பூர் சம்பவம் - நாடாளுமன்றத்தில் ஒத்திவைப்பு நோட்டீஸ்
மணிப்பூரில் உள்ள பெண்களின் பாதுகாப்பு தொடர்பாக விவாதிக்க கோரி நாடாளுமன்ற இரு அவைகளிலும் ஒத்திவைப்பு நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கும் நிலையில், பல்வேறு கட்சிகள் ஒத்திவைப்பு நோட்டீஸ் அளித்துள்ளன.
மணிப்பூர் கலவரத்தின் போது, பெண்களை நிர்வாணமாக்கி ஊர்வலமாக அழைத்துச் சென்ற வீடியோ வெளியானதால் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மணிப்பூரில் பழங்குடியின பெண்களுக்கு நடந்த கொடூர சம்பவத்திற்கு எதிர்க்கட்சிக கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
சம்பந்தப்பட்ட நபர்களை சட்டத்தின் முன் நிறுத்தி கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் குரல் கொடுத்து வரும் நிலையில், நாடாளுமன்றத்தில் ஒத்திவைப்பு நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது.