< Back
தேசிய செய்திகள்
பைக்கில் நம்பி மகளை ஏற்றிவிட்ட பெற்றோர்.. சிறுமியை சீரழித்த கொடூரர்களுக்கு விபரீத தண்டனை !
தேசிய செய்திகள்

பைக்கில் நம்பி மகளை ஏற்றிவிட்ட பெற்றோர்.. சிறுமியை சீரழித்த கொடூரர்களுக்கு விபரீத தண்டனை !

தினத்தந்தி
|
10 Jun 2022 2:28 PM IST

ஜார்க்கண்டில் பெற்றோர் நம்பி தன் மகளை பைக்கில் ஏற்றிவிட்ட நிலையில், சிறுமியை இருவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

ராஞ்சி,

ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள கும்லா பகுதியைச் சேர்ந்த சிறுமியும் பெற்றோரும், அருகில் உள்ள கிராமத்தில் நடந்த திருமணத்திற்கு சென்றுவிட்டு வீடு திரும்பி உள்ளனர்.

அப்போது, பேருந்து கிடைக்காததால், அந்த வழியாக பைக்கில் சென்ற குல்மா பகுதியைச் சேர்ந்த இருவரிடம் சிறுமியை ஏற்றிச் சென்று ஊரில் விடுமாறு பெற்றோர் கூறி உள்ளனர். ஆனால், அந்த இருவரும் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிகிறது. இதனை பெற்றோரிடம் சிறுமி கூறிய நிலையில், ஆத்திரமடைந்த பெற்றோரும் உறவினர்களும், சம்பந்தப்பட்ட இரு நபர்களையும் கடுமையாக தாக்கி உள்ளனர்.

தொடர்ந்து ஆத்திரம் அடங்காமல், அவர்கள்மீது மண்ணெண்ணெயை ஊற்றி பைக்குடன் தீ வைத்து உள்ளனர். இதில் ஒருவர் உயிரிழந்த நிலையில், மற்றொரு நபர் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள கும்லா போலீசார், இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்