< Back
தேசிய செய்திகள்
நிதி ஆயோக் தலைமை செயல் அதிகாரியாக பரமேஸ்வரன் பொறுப்பேற்பு
தேசிய செய்திகள்

நிதி ஆயோக் தலைமை செயல் அதிகாரியாக பரமேஸ்வரன் பொறுப்பேற்பு

தினத்தந்தி
|
12 July 2022 6:13 AM IST

நிதி ஆயோக் தலைமை செயல் அதிகாரியாக பரமேஸ்வரன் பொறுப்பேற்றுக்கொண்டார்.

புதுடெல்லி,

'நிதி ஆயோக்' தலைமை செயல் அதிகாரியாக பரமேஸ்வரன் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். தனக்கு இந்த வாய்ப்பை அளித்த பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக பரமேஸ்வரன் கூறியுள்ளார்.

இவர் உத்தரபிரதேச பிரிவை சேர்ந்த 1981-ம் ஆண்டு பேட்ச் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆவார். இவருக்கு குடிநீர் மற்றும் தூய்மை பணிகள் துறையில் 25 ஆண்டுகள் அனுபவம் உள்ளது. அதனால். மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தை அமல்படுத்துவதில் முக்கிய பங்கு வகித்தார்.

கடந்த 2016-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டுவரை மத்திய குடிநீர் மற்றும் தூய்மை பணிகள் அமைச்சகத்தின் செயலாளராக இருந்தார்.

மேலும் செய்திகள்