< Back
தேசிய செய்திகள்
நிதி ஆயோக் தலைமை நிர்வாக அதிகாரியாக பரமேஸ்வரன் ஐயர் நியமனம்
தேசிய செய்திகள்

நிதி ஆயோக் தலைமை நிர்வாக அதிகாரியாக பரமேஸ்வரன் ஐயர் நியமனம்

தினத்தந்தி
|
24 Jun 2022 4:31 PM IST

நிதி ஆயோக் தலைமை நிர்வாக அதிகாரியாக பரமேஸ்வரன் ஐயர் நியமிக்கப்பட்டுள்ளார்.

புதுடெல்லி,

நிதி ஆயோக் அமைப்பின் தலைமை செயல் அதிகாரியாக பணியாற்றி வருபவர் அமிதாப் கந்த். இவர் கடந்த 2016ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் இவர் நிதி ஆயோக் அமைப்பின் செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.

இந்த நிலையில் அமைச்சரவை நியமனக் குழுவின் ஒப்புதலின் படி அவரது பதவிக்காலம் 2022ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை நீட்டிக்கப்பட்டது.

இந்நிலையில், நிதி ஆயோக் தலைமை நிர்வாக அதிகாரியாக பரமேஸ்வரன் ஐயர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தற்போதைய தலைமை அதிகாரி அமிதாப் காந்த் பதவி காலம் ஜூன் 30 உடன் நிறைவு பெறுவதையொட்டி புதிய அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும் செய்திகள்