< Back
தேசிய செய்திகள்
ஆதார் இணைக்காத பான் கார்டுகள் ஏப்ரல் 1-ந்தேதி முதல் செல்லாது - மத்திய நேரடி வரிகள் வாரியம் அறிவிப்பு
தேசிய செய்திகள்

'ஆதார் இணைக்காத பான் கார்டுகள் ஏப்ரல் 1-ந்தேதி முதல் செல்லாது' - மத்திய நேரடி வரிகள் வாரியம் அறிவிப்பு

தினத்தந்தி
|
15 Feb 2023 8:47 PM IST

ஆதார் இணைக்காத பான் கார்டுகள் ஏப்ரல் 1-ந்தேதியில் இருந்து செயலிழக்கும் என மத்திய நேரடி வரிகள் வாரியம் அறிவித்துள்ளது.

புதுடெல்லி,

பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க அறிவுறுத்தப்பட்டு வரும் நிலையில், அதற்கான கால அவகாசம் ஏற்கனவே பலமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க வரும் மார்ச் 31-ந்தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன் பிறகு விலக்கு அளிக்கப்பட்டுள்ள பார் கார்டுகளைத் தவிர மற்ற ஆதார் இணைக்காத பான் கார்டுகள் அனைத்தும், ஏப்ரல் 1-ந்தேதியில் இருந்து செயலிழக்கும் என மத்திய நேரடி வரிகள் வாரியம் அறிவித்துள்ளது.

மேலும் செய்திகள்