< Back
தேசிய செய்திகள்
ஆதாருடன் பான்கார்டை இணைப்பதற்கு இன்றே கடைசி நாள்; தவறினால் ரூ.1000 அபராதம்
தேசிய செய்திகள்

ஆதாருடன் பான்கார்டை இணைப்பதற்கு இன்றே கடைசி நாள்; தவறினால் ரூ.1000 அபராதம்

தினத்தந்தி
|
30 Jun 2022 5:51 PM IST

பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று மத்திய நேரடி வரிகள் வாரியம் கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி அறிவிக்கை வெளியிட்டது.

புதுடெல்லி,

பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று மத்திய நேரடி வரிகள் வாரியம் கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி அறிவிக்கை வெளியிட்டது. அதன்பிறகு ஆதார்-பான் இணைப்புக்கான அவகாசம் பல முறை நீட்டிக்கப்பட்டு வருகிறது.

இந்த இரு எண்களையும் இணைப்பதற்கு கடந்த மார்ச் 31-ந் தேதி வரை வருமான வரித்துறை அலுவலகம் அவகாசம் அளித்தது. அதன் பிறகு அந்த கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது. அடுத்த ஆண்டு (2023) மார்ச் 31-ந் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் கடந்த மார்ச் 31-ந் தேதிக்கு பிறகு பான் எண்ணை, ஆதார் எண்ணுடன் இணைப்பவர்களுக்கு ரூ.500 அபராதம் வசூலிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. அதன்படி தற்போது ரூ.500 அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த ரூ.500 அபராதத்துடன் பான் எண், ஆதார் எண்ணை இணைக்க ஜூன். 30-ந் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டு இருந்தது. அதன் பிறகு அபராதம் ரூ.1000 என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி ரூ.500 அபராதத்துடன் கூடிய காலக்கெடு இன்றுடன் முடிகிறது.

மேலும் செய்திகள்