< Back
தேசிய செய்திகள்
இந்திய எல்லைக்குள் இரவில் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தானிய ஆளில்லா விமானம்
தேசிய செய்திகள்

இந்திய எல்லைக்குள் இரவில் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தானிய ஆளில்லா விமானம்

தினத்தந்தி
|
16 Oct 2022 11:20 PM IST

பாகிஸ்தானில் இருந்து இந்திய எல்லைக்குள் இன்றிரவு அத்துமீறி நுழைந்த ஆளில்லா விமானம் ஒன்றை எல்லை பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தினர்.



அமிர்தசரஸ்,


பாகிஸ்தானில் இருந்து இந்தியாவின் பஞ்சாப்பில் உள்ள குர்தாஸ்பூர் பிரிவு எல்லைக்குள் வெள்ளி கிழமையன்று ஆளில்லா விமானம் ஒன்று அத்துமீறி நுழைந்தது. இதனை கண்ட ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த எல்லை பாதுகாப்பு படையினர் உடனடியாக அதனை சுட்டு வீழ்த்தினர்.

இந்நிலையில், இன்றிரவு 9.15 மணியளவில் பஞ்சாப்பில் உள்ள அமிர்தசரஸ் பிரிவு எல்லைக்குள் ராணியா பகுதியில் ஆக்டா-காப்டர் என்ற அத்துமீறி புகுந்த ஆளில்லா விமானம் ஒன்றை பி.எஸ்.எப். வீரர்கள் சுட்டு வீழ்த்தினர்.

இதன் எடை 12 கிலோ உள்ளது. துப்பாக்கி சூட்டில் எட்டு இறக்கைகளில் இரண்டு இறக்கைகள் சேதமடைந்து உள்ளன. தொடர்ந்து தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. 2 நாட்களில் சுட்டு வீழ்த்தப்பட்ட 2-வது ஆளில்லா விமானம் இதுவாகும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்